Connect with us

Raj News Tamil

‘ஒரு தலை ராகம்’ பட நடிகர் மரணம் !

சினிமா

‘ஒரு தலை ராகம்’ பட நடிகர் மரணம் !

80-களின் காலகட்டத்தில் வெளியான முக்கியமான காதல் திரைப்படங்களில் ஒன்று ஒரு தலை ராகம். டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான இப்படம், அந்த காலத்தில், பெரும் வெற்றியை பதிவு செய்திருந்தது.

இந்நிலையில், இந்த படத்தில் நடித்திருந்த நடிகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, செய்தி வெளியாகி, பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அதாவது, இந்த படத்தில் வில்லனுக்கு உதவியாளராக கைலாஷ் நாத் என்பவர் நடித்திருந்தார். அந்த படம் மட்டுமின்றி, பாலைவனச்சோலை, வள்ளி உள்ளிட்ட படங்களில் நடித்த இவருக்கு, சமீபத்தில் கல்லீரல் பிரச்சனை ஏற்பட்டது.

இதற்காக சிகிச்சை எடுத்து வந்த இவர், தற்போது மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவலை அறிந்த சக நடிகர்கள், அவருக்கு இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

More in சினிமா

To Top