Connect with us

Raj News Tamil

கெஞ்சி கூத்தாடும் வெங்கட் பிரபு! அஜித் ரசிகர்கள் சோகம்!

சினிமா

கெஞ்சி கூத்தாடும் வெங்கட் பிரபு! அஜித் ரசிகர்கள் சோகம்!

இயக்குநர் வெங்கட் பிரபு, தற்போது விஜயின் தி கோட் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையே, தான் இயக்கிய மங்காத்தா படத்தை, மே 1-ஆம் தேதி அன்று, ரீ ரிலீஸ் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர், என்னால் முடிந்தவரை முயற்சி செய்துவிட்டேன். சன் பிக்சர்ஸிடம் தான் படத்தின் உரிமை உள்ளது. அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று, மங்காத்தா ரீ ரிலீஸ் குறித்து பதிவிட்டுள்ளார்.

இவரது இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், சோகம் அடைந்துள்ளனர். வெங்கட் பிரபுவின் பதிவை வைத்து பார்க்கும்போது, மங்காத்தா ரீ ரிலீஸ் ஆவது சந்தேகம் என்றும் இணையத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

More in சினிமா

To Top