Connect with us

Raj News Tamil

தொடர்ந்து 7-வது நாளாக இன்றும் நாடாளுமன்றம் முடங்கியது!

அரசியல்

தொடர்ந்து 7-வது நாளாக இன்றும் நாடாளுமன்றம் முடங்கியது!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது இதில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் 7-வது நாளாக இன்றும் நாடாளுமன்றம் முடங்கியது.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தியும் முழக்கமிட்டும் வருகின்றன.

இந்நிலையில் மாநிலங்களவையில் இன்று காலை நிகழ்வுகள் தொடங்கிய உடனே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட மக்களவையும் பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இரு அவைகளும் மீண்டும் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More in அரசியல்

To Top