Connect with us

Raj News Tamil

“அதானி-அம்பானி விஷயத்தில் அமைதி ஏன்” – ராகுல் காந்தியை விமர்சித்த பிரதமர் மோடி!

இந்தியா

“அதானி-அம்பானி விஷயத்தில் அமைதி ஏன்” – ராகுல் காந்தியை விமர்சித்த பிரதமர் மோடி!

தெலங்கானா மாநிலம் வேமுலவாடா பகுதியில், பாஜகவின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்திருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி பேசியது பின்வருமாறு:-

“தேர்தல் அறிவித்ததில் இருந்து, காங்கிரஸ் கட்சியினர், அம்பானி-அதானியை விமர்சிப்பதை, நிறுத்திவிட்டார்கள். தெலங்கானா மண்ணில் இருந்து நான் கேட்கிறேன், அம்பானி-அதானியிடம் இருந்து எவ்வளவு பெற்றீர்கள்?

டெம்போ முழுவதும் உள்ள பணக்கட்டுக்கள் காங்கிரஸ்-க்கு கிடைத்தா? அம்பானி-அதானியை விமர்சனம் செய்வதை நிறுத்துவதற்கு, எந்தவிதமான ஒப்பந்தம் இருவருக்கும் இடையே கையெழுத்தாகியுள்ளது?” என்று பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

தொடர்ந்து பேசிய அவர், “சில விஷயங்கள் எனக்கு சந்தேகமாக உள்ளது. 5 வருடங்களாக, அவர்கள் அம்பானி-அதானியை விமர்சித்து வந்தனர். ஆனால், ஒரே இரவில் அதனை நிறுத்திவிட்டார்கள்.

இதற்கு அர்த்தம் என்னவென்றால், டெம்போ முழுவதும் நிறைந்திருந்த நோட்டுக் கட்டுக்களை காங்கிரஸ் கட்சியினர் பெற்றுள்ளனர். நீங்கள் நாட்டுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்” என்று கூறினார்.

மோடியின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அதில், “நேரம் மாற்றிக் கொண்டே இருக்கிறது. நண்பர்கள் யாரும் இனிமேல் நண்பர்கள் கிடையாது. 3-ஆம் கட்ட தேர்தல் முடிந்த பிறகு, பிரதமர் மோடி, தன்னுடைய சொந்த நண்பர்களையே விமர்சித்து வருகிறார். இது, மோடியின் நாற்காலி ஆடிக் கொண்டிருப்பதை தான் காட்டுகிறது” என்று ட்வீட் வெளியிட்டிருந்தார்.

இதேபோல், மோடியின் பேச்சுக்கு எதிர்விணையாற்றிய பிரியங்கா காந்தி, “மிகப்பெரிய தொழிலதிபர்களிடம், பாஜக நெருக்கமாக உள்ளது என்பதை, நாங்கள் தினந்தோறும் கூறி வருகிறோம். பாஜக தங்களது நண்பர்களின் 16 லட்சம் கோடி ரூபாய் கடனை, தள்ளுபடி செய்தது. உத்தரபிரதேசத்தில், விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டனர். ஆனால், அவர்களது கடன், அரசால் தள்ளுபடி செய்யப்படவில்லை” என்று கூறினார்.

மேலும், அம்பானி-அதானியை பற்றி ராகுல் காந்தி பேசவில்லை என்ற மோடியின் பேச்சை மறுத்த பிரியங்கா, அம்பானி-அதானி குறித்து ராகுல் காந்தி தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார் என்று தெரிவித்தார்.

More in இந்தியா

To Top