Connect with us

Raj News Tamil

தேசியக் கொடி அவமதித்த விவகாரம் – காவலர் பணியிட மாற்றம்!

தமிழகம்

தேசியக் கொடி அவமதித்த விவகாரம் – காவலர் பணியிட மாற்றம்!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான லீக் ஆட்டங்கள் தற்போது நடந்து வருகின்றன. அந்த வகையில், இன்று, பாகிஸ்தான் அணியும், ஆப்கானிஸ்தான் அணியும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மேத உள்ளன.

இந்த போட்டியை காண்பதற்கு, வழக்கம் ரசிகர்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

இதற்கிடையே, இந்த போட்டியை காண வரும் ரசிகர்களில் சிலர், மத்திய அரசுக்கு எதிரான பதாகைகளை எடுத்து வருவதாகவும், பாலஸ்தீனம், காலிஸ்தான் ஆகிய விவகாரங்களுக்கு ஆதரவான பதாகைகளை எடுத்து வருவதாகவும, ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில், சென்னை செம்பியம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த நாகராஜ் என்பவர், சோதனையில் ஈடுபட, சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது, ரசிகர்கள் சிலர் எடுத்துச் சென்ற இந்திய தேசிக் கொடிகளை பிடிங்கிய நாகராஜ், அதனை குப்பை தொட்டியில் தூக்கி வீச முயன்றார். பின்னர், ரசிகர்கள் ஆட்சேபம் தெரிவித்தையடுத்து, தேசியக் கொடியை குப்பையில் வீசாமல், காவல்துறை வாகனத்தில் வைத்தார்.

இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

“காலிஸ்தான், பாலிஸ்தான் கொடிகளுக்கும், தேசிய கொடிகளுக்கும் கூட வித்தியாசம் தெரியாதா? என்றும், தேசியக் கொடியை குப்பைத் தொட்டியில் வீசுவது சட்டப்படி குற்றம் என்றும், பல்வேறு கமெண்ட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தன.

இதையடுத்து, இந்த வீடியோ, சென்னை காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கவனத்திற்கு சென்றது. பின்னர், இதுகுறித்து விசாரணை நடத்திய அவர், அந்த காவல்துறை ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளார்.

தற்போது, அந்த காவல்துறை ஆய்வாளர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்திய தேசியக் கொடிகளை சேப்பாக்கம் மைதானத்துக்குள் எடுத்து செல்ல அனுமதி வழங்கி இருப்பதாகவும் காவல்துறை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.

More in தமிழகம்

To Top