Connect with us

Raj News Tamil

பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்!

விளையாட்டு

பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்!

இந்தியாவில் பல்வேறு நகரங்களில் ஐபில் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதை கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த தொடரில் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, பெங்களூரு அணி பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக விராட் கோஹ்லி மற்றும் பாப் டு பிளிஸ்சிஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தனர்.

அதிரடியாக விளையாடிய இருவரும் அணியின் ரன்ரேட்டை மளமளவென உயர்த்தினர். நடப்பு சீசனில் முதல் முறையாக 100 ரன்களை கடந்த இவர்களது பார்ட்னர்ஷிப் 125 ரன்களில் பிரிந்தது. டு பிளிஸ்சிஸ் 44 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய மேக்ஸ்வெல் இந்த முறையும் ஏமாற்றம் அளித்தார். சிறப்பாக விளையாடிய விராட் கோஹ்லி நடப்பு ஐ.பி.எல். தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். மட்டுமின்றி நடப்பு சீசனில் குவிக்கப்பட்ட முதல் சதமாகவும் இது பதிவானது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோஹ்லி 113 ரன்கள் குவித்து அசத்தினார். ராஜஸ்தான் தரப்பில் சஹால் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற வலுவான இலக்குடன் ராஜஸ்தான் அணியின் ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் வந்த வேகத்தில் அதிர்ச்சியளித்து வெளியேற, ஜோஸ் பட்லருடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார்.

அதிரடியாக ரன்களை குவிக்கத் தொடங்கிய இந்த ஜோடி அணியின் ரன் ரேட்டை வேகமாக உயர்த்தியது. தொடர்ந்து அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன் மற்றும் ஜோஸ் பட்லர் இணை தங்களது அரை சதத்தை பதிவு செய்து அசத்தினர்.

இந்த ஜோடியில் அணித்தலைவர் சஞ்சு சாம்சன் 69 (42) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ரியான் பராக்( 4 ), துருவ் ஜூரெல்( 2 ) ரன்களுடன் வெளியேறினர்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோஸ் பட்லர் 58 பந்துகளில் 4 சிக்சர்கள், 9 பவுண்டரிகளுடன் 100 ரன்களும் ஹெட்மயர் 11 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றனர்.

இறுதியில் ராஜஸ்தான் அணி 19.1 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 189 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

Continue Reading
Advertisement
You may also like...

More in விளையாட்டு

To Top