Connect with us

Raj News Tamil

என்னது இது ரஜினியா? குழப்பத்தில் ஆழ்த்திய புகைப்படம்!

சினிமா

என்னது இது ரஜினியா? குழப்பத்தில் ஆழ்த்திய புகைப்படம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். உலகம் முழுவதும் கோடிக்கனக்கான பேர் இவரது தீவிர ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.

ஒருசில பேர், இவரது பாடி லேங்குவேஜையும் மாற்றிக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இவ்வளவு ஏன், நாம் அனைவருக்குள்ளும் ஒரு ரஜினி ரசிகன் இருப்பான் என்று கூறும் அளவிற்கு, அவரது ஸ்டைல் பலரையும் கவர்ந்திருக்கிறது.

இவ்வாறு இருக்க, சாதாரண ஓட்டல் ஒன்றில், பழைய ஆடை ஒன்றை அணிந்துக் கொண்டு, ரஜினி அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், நம்ம தலைவரா இது என்று ஆச்சரியம் அடைந்தனர்.

ஆனால், அதன்பிறகே, இது ரஜினி அல்ல என்றும், பார்ப்பதற்கு அவரைப் போலவே இருக்கும் நபர் என்றும் தெரியவந்தது.

தற்போது, இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

More in சினிமா

To Top