Connect with us

Raj News Tamil

ரஜினி படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சினிமா

ரஜினி படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில், சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது.

இந்த படத்திற்கு பிறகு, இவர் கௌரவ வேடத்தில் நடித்துள்ள லால் சலாம் படத்தின், டீசர் தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது.

அதாவது, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடிப்பில், கிரிக்கெட்டை மையப்படுத்தி புதிய திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது.

இந்த திரைப்படத்தில், நடிகர் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்ற வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர், நாளை காலை 10.45 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1.34 நிமிடங்கள் இந்த டீசரின் Duration இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

More in சினிமா

To Top