Connect with us

Raj News Tamil

“தென் இந்தியர்கள் – ஆப்ரிக்கர்கள், வடஇந்தியர்கள் – வெள்ளையர்கள்” – காங்கிரஸ் மூத்த தலைவரின் சர்ச்சை பேச்சு!

இந்தியா

“தென் இந்தியர்கள் – ஆப்ரிக்கர்கள், வடஇந்தியர்கள் – வெள்ளையர்கள்” – காங்கிரஸ் மூத்த தலைவரின் சர்ச்சை பேச்சு!

வெளிநாடு வாழ் இந்தியர்களின் காங்கிரஸ் கட்சி தலைவர் சாம் பிட்ரோடா, சமீபத்தில், அமெரிக்காவில் உள்ள பரம்பரை வரி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவில் கொண்டு வரப்படும் என்று கூறியிருந்தார்.

இவரது இந்த பேச்சு பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த சட்டம் இந்தியாவில் கொண்டு வரப்படாது என்று காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்திருந்தது. இந்நிலையில், இவர் கூறியுள்ள இன்னொரு கருத்தும், பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, தி ஸ்டேட்ஸ்மென் என்ற செய்தி ஊடகத்திற்கு, சாம் பிட்ரோடா பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

அந்த பேட்டியில், “இந்தியாவை போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டை, அனைவரும் சேர்ந்து பிடிக்க வேண்டும். கிழக்கு இந்தியாவில் வசிப்பவர்கள் பார்ப்பதற்கு சீனர்களை போலவும், மேற்கு இந்தியாவில் வசிப்பவர்கள் அரபு நாட்டவர்களை போலவும், வடக்கு இந்தியாவில் வசிப்பவர்கள் வெள்ளையர்களை போலவும், தென் இந்தியாவில் வசிப்பவர்கள் ஆப்ரிக்க இனத்தவர்களை போலவும் உள்ளனர். ஆனால், நாம் அனைவரும் சகோதர, சகோதரிகள் தான்” என்று கூறியிருந்தார்.

மேலும், நாட்டின் பொதுமக்கள் 75 ஆண்டுகளாக, மகிழ்ச்சியான சூழலில் வாழ்ந்து வந்தனர் என்றும், ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர் என்றும், அவர் கூறியிருந்தார். இவ்வாறு சாம் பிட்ரோடா பேசியதற்கு, பாஜக தலைவர்கள் தங்களது எதிர்ப்புகளை கூறி வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய மனிப்பூர் முதலமைச்சர் என்.பைரென் சிங், மதத்தின் பின்னணியில் நாட்டை பிளவுப்படுத்த வேண்டும் என்ற மறைமுக நோக்கத்தை, காங்கிரஸ் கொண்டுள்ளது என்று குற்றஞ்சாட்டினார். மேலும், கடந்த ஆண்டு மே மாதம் நடந்த மிகப்பெரிய கலவரத்திற்கு, எதிர்கட்சிகள் தான் காரணம் என்றும் விமர்சித்தார்.

இந்த கலவரத்தில், 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீட்டை இழந்ததாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல், அஸ்ஸாம் மாநில முதலமைச்சரும், சாம் பிட்ரோடாவின் பேச்சுக்கு, தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

இதற்கு காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இதேபோல், பாஜக கட்சியின் செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.கேசவன் சேம், சாம் பிட்ரோடாவின் இனம் சார்ந்த கருத்து, காங்கிரஸ் கட்சியின் ஆபத்தான மற்றும் பிளவுப்படுத்தும் மனநிலையை வெளிக் கொண்டு வந்துவிட்டது என்று விமர்சித்துள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சியின் சகுனி சாம் பிட்ரோடா தான் என்றும் அவர் கடுமையாக தாக்கியுள்ளார்.

More in இந்தியா

To Top