Connect with us

Raj News Tamil

சம்பளத்தை குறைத்துக்கொண்ட சிவகார்த்திகேயன்..பிரின்ஸ் படம் தோல்விதான் காரணமா?

சினிமா

சம்பளத்தை குறைத்துக்கொண்ட சிவகார்த்திகேயன்..பிரின்ஸ் படம் தோல்விதான் காரணமா?

சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். இதை அடுத்து கமல்ஹாசனின் ராஜ்குமார் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார்.

இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இந்த படத்தில் நடிப்பதற்கு தனது சம்பளத்தில் ஐந்து கோடி ரூபாயை சிவகார்த்திகேயன் குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பிரின்ஸ் படம் படுதோல்வி அடைந்ததால் தனது சம்பளத்தை பாதியாக குறைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top