Connect with us

Raj News Tamil

ஏசி பயன்படுத்த கட்டுப்பாடுகளை விதித்த மின்வாரியம்

இந்தியா

ஏசி பயன்படுத்த கட்டுப்பாடுகளை விதித்த மின்வாரியம்

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மின்சார பயன்பாடும் அதிகரித்து வருகிறது. மின்நுகர்வு உச்சத்தை எட்டுவதால் ஏசி பயன்படுத்த மின்வாரியம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

எனவே அதிக மின் நுகர்வை தவிர்க்க சில வழிகாட்டுதல்களை கேரள மின் வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: தொழிற்சாலைகள் இரவு 10:00 மணி முதல் அதிகாலை 2:00 மணி வரை வேலைகளை தவிர்க்க வேண்டும்.

குடிநீர் பம்பிங் பணிகளின் நேரத்தை குடிநீர் வினியோகம் பாதிக்காத வகையில் மறு சீரமைக்க வேண்டும். பெரிய கடைகள், வணிக நிறுவனங்கள் தங்களின் பெயர் பலகைகளில் உள்ள விளக்குகள், அலங்கார விளக்குகளை தவிர்க்க வேண்டும்.

வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஏசி பயன்படுத்தும் போது, 26 டிகிரி செல்ஷியஸ் இருப்பது போன்று ‘செட்’ செய்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் இரவு 10:00 மணி முதல் அதிகாலை 2:00 மணி வரை முடிந்த அளவு மின் பயன்பாட்டை குறைக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top