Connect with us

Raj News Tamil

பெண்கள் கல்வி கற்க எந்தத் தடையும் இருக்கக் கூடாது: முதல்வா் மு.க.ஸ்டாலின்!

தமிழகம்

பெண்கள் கல்வி கற்க எந்தத் தடையும் இருக்கக் கூடாது: முதல்வா் மு.க.ஸ்டாலின்!

சென்னை கொளத்தூரில் நேற்று இரவில் நடைபெற்ற அறநிலையத் துறை கல்லூரியின் 3-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பெண்கள் கல்வி கற்க எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அவர் பேசியதாவது:

எவ்வளவு பணி இருந்தாலும், கொளத்தூா் தொகுதிக்கு வந்து, அனைவரின் முகத்தையும் பார்த்தால்தான், எனக்குப் புத்துணா்வே ஏற்படுகிறது.

தமிழ்நாட்டுக்கு முதல்வராக இருந்தாலும், கொளத்தூா் தொகுதிக்கு சட்டப் பேரவை உறுப்பினா். தொகுதியைச் சோ்ந்தவா்கள் என்னை எம்.எல்.ஏ.,வாகத் தோ்ந்தெடுத்த காரணத்தால்தான், இன்றைக்கு தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கிறேன்.

2021-ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 10 கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவித்து, அதில் ஒன்றாக கபாலீஸ்வரா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது.

கல்வி என்பது நமக்கு எளிதாகக் கிடைத்துவிடவில்லை. எத்தனையோ போராட்டத்துக்குப் பிறகு நமக்கு கல்வி கிடைத்துள்ளது. கல்வி நமக்கு மட்டுமல்ல, நம்முடைய தலைமுறையே முன்னேறுவதற்கான அச்சாரமாக அமைந்திருக்கிறது.

அதனால்தான் அனைவரும் நன்றாகப் படிக்க வேண்டுமென்று திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதிலும், பெண்கள் கல்வி கற்க எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.

அரசின் சார்பில் பல்வேறு திட்டங்களைத் தீட்டி உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறோம். இதையெல்லாம் மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொண்டு நன்றாகப் படிக்க வேண்டும்.

நன்றாகப் படித்து, உயா்ந்த பதவிகளில் அமர வேண்டும். தமிழ்நாட்டை பெருமை அடைய வைப்பது கல்விதான். கல்வியை யாராலும் திருட முடியாது. அதுதான் நிலையான சொத்து என்றார் முதல்வா் ஸ்டாலின்.

More in தமிழகம்

To Top