சினிமா
வெளியானது துணிவு படத்தின் ட்ரைலர் – அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்..!
ஹெச்.வினோத்துடன் அஜித் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் துணிவு. இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இதற்கிடையே வாரிசு படமும் பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது. இதன் காரணமாக இந்த பொங்கல் ரேஸில் யார் வெல்லப்போகிறார் என்பதை காண திரையுலகம் ஆவலாக இருக்கிறது.
க்ரைம் சம்பந்தப்பட்ட கதை எனவும், முழுக்க முழுக்க அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்திருக்கிறார் எனவும் பரவலாக பேச்சு எழுந்திருக்கிறது. இந்நிலையில் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது.
You must be logged in to post a comment Login