Connect with us

Raj News Tamil

விஜய் ஆன்டனியா ? ஜெயம் ரவியா? மோதிக்கொள்ளும் இருபிரபலங்கள்!

சினிமா

விஜய் ஆன்டனியா ? ஜெயம் ரவியா? மோதிக்கொள்ளும் இருபிரபலங்கள்!

நடிகர் சிவா நடிப்பில் வெளியான ‘தமிழ்படம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சி.எஸ்.அமுதன். இவர் தமிழ்த்திரையுலகில் மின்னலே, அனேகன் உள்ளிட்ட திரைப்படங்களில் சில பாடல்களும் எழுதி பிரபலமடைந்தார். இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள படம் ‘ரத்தம்’.இப்படத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார் மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனங்களை ஈர்த்தது.

இந்நிலையில், ‘ரத்தம்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளத்தில் போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளார். மேலும்,ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘இறைவன்’ திரைப்படம் வருகிற 28-ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top