Connect with us

Raj News Tamil

செல்லப்பிராணிக்கு பிறந்தநாள் கொண்டாடிய விஷால்!

சினிமா

செல்லப்பிராணிக்கு பிறந்தநாள் கொண்டாடிய விஷால்!

செல்லமே படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் விஷால். அதன்பின்னர் சண்டக்கோழி, திமிரு, சத்யம், போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். மேலும்,நடிப்பில் மட்டுமல்லாது பல்வேறு சமூக நல பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் தற்போது ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடித்துள்ளார். இதில் ரித்து வர்மா, எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், நடிகர் விஷால் தனது வீட்டில் செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த நாய் விஷால் வளர்க்க தொடங்கி 14 ஆண்டுகள் ஆனது. இதை நாயின் பிறந்தநாளாக குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடினார். இந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த விஷால் “பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் மகனே” என்று குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top