Connect with us

Raj News Tamil

நாம் சிந்தித்து செயல்பட வேண்டும்: அமித்ஷா!

இந்தியா

நாம் சிந்தித்து செயல்பட வேண்டும்: அமித்ஷா!

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் சில சமூக விரோத சக்திகள் உள்ளன. என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

ஜி20 மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:

மனிதர்கள், சமூகங்கள் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு தொழில் நுட்பம் மிக முக்கியம் வகிக்கிறது. அதேநேரத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் சில சமூக விரோத சக்திகள் உள்ளன. எனவே டிஜிட்டல் உலகத்தை அனைவருக்கும் பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு நடவடிக்கைகள் அவசியம். இதனால் பாதுகாப்பு குறித்த மாநாடு மிகவும் முக்கியமானது.

ஆய்வின் அறிக்கையில் ஹேக்கிங் உள்ளிட்ட சைபர் குற்றங்கள் உலக அளவில் மிகவும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துக்கின்றன என தகவல் தெரிவிக்கின்றது. எதிர்காலத்தில் சைபர் குற்றங்கள் பன்மடங்கு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

தேசிய பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துக்கிறது. இது போன்ற குற்றவாளிகளை கண்டறிந்து, குற்ற சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். நாம் சிந்தித்து செயல்பட வேண்டும். சைபர் குற்றங்களை சமாளிக்க, நாடுகள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

More in இந்தியா

To Top