Connect with us

Raj News Tamil

சேலை அணிந்தால் கேன்சர் வருமா? – அதிர்ச்சி தகவல்!

இந்தியா

சேலை அணிந்தால் கேன்சர் வருமா? – அதிர்ச்சி தகவல்!

இந்திய பெண்களின் அடையாளமாக இருக்கக் கூடிய ஆடை வகைகளில் ஒன்று சேலை. 5-ல் இருந்து 6 மீட்டர் வரை இருக்கக் கூடிய இந்த உடை, உலகில் உள்ள அனைத்து மக்களாலும், விரும்பப்படுகிறது. ஆனால், இந்த சேலை கேன்சரை உருவாக்கும் என்ற தகவல் வெளியாகி, பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்த ஆடை மட்டுமின்றி, வேறு எந்தவொரு ஆடையை தவறாக அணிந்தாலும், அது கேன்சருக்கு வழிவகுக்குமாம். இந்தியாவில் தான் சேலையை அதிக அளவில் பயன்படுத்தி வருவதால், சேலை சேன்சர் இந்தியாவில் மட்டும் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள பி.எஸ்.ஆர்.ஐ மருத்துவமனையின், கேன்சர் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் விவேக் குப்தாவின் கூற்றுப்படி, “ ஒரு பெண் ஒரே ஆடையை நீண்ட நாட்களுக்கு அணிந்தால், இது இடுப்பில் உள்ள தோலை தேய்க்க தொடங்கும். பிறகு, அந்த தோல் உரிய ஆரம்பிக்கும்.

அதன்பிறகு, அந்த தோல், கருமை நிறமாக மாறிவிடும். இவ்வாறு தொடர்ச்சியாக நடக்கும்போது, கேன்சர் ஆரம்பமாகும். ஆடையை விட, சுத்தமாக இருப்பது தான் மிகவும் முக்கியமான விஷயமாகும்.

எந்த இடத்தில், அதிகப்படியான வெப்பம் உள்ளதோ, அங்கு இந்த வகையான கேன்சர் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் தான், இந்த மாதிரியான கேன்சர் நோய்கள் பதிவாகி வருகிறது.

இந்தியாவில் பெண்களுக்கு ஏற்படும் கேன்சர் நோய்களில், 1 சதவீதம் இந்த வகையான கேன்சர் நோய்கள் ஏற்படுகின்றன. மருத்துவ உலகில், இந்த கேன்சர் வகை, ‘ஸ்குவாமஸ் செல் கார்சினோமா’ என்று அழைக்கப்படுகிறது.”

“மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஆா்.என்.கூப்பர் மருத்துவமனையில், இதுதொடர்பான ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியில், வேட்டி அணிவது குறித்தும் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

68 வயதான மூதாட்டியை பரிசோதனை செய்தபோது, அவருக்கு இந்த வகையான கேன்சர் இருப்பதை அறிந்தபோது, சேலை புற்றுநோய் என்று அவ்வகை நோய்க்கு பெயர் வைத்தனர். அந்த மூதாட்டி, தன்னுடைய 13 வயதில் இருந்து, சேலை அணிந்து வந்துள்ளாராம்.”

காங்கிரி கேன்சர் என்றால் என்ன?

இதேபோல், காங்கிரி கேன்சர் என்பது காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவும் ஒரு வகையான தோல் புற்றுநோய் தான். இந்த வகையான நோய் காஷ்மீரில் மட்டும் தான் பதிவாகியுள்ளது.

கடுமையான குளிர்காலங்களில், மண்ணால் செய்யப்பட்ட சிறிய பானையின் உள்ளே நெருப்பு கங்கை வைத்து, தங்களது ஆடைகளின் உள்ளே, காஷ்மீர் மக்கள் வைத்துக் கொள்வார்கள். இவ்வாறு வைத்துக் கொள்ளும்போது, போதுமான வெப்பம் அவர்களுக்கு கிடைக்கும். ஆனால், இவ்வாறு தொடர்ச்சியாக வரும் வெப்பம், வயிற்றுக்கும் தொடைகளுக்கும் கிடைத்து, அது கேன்சர் நோயாக மாறும்.

இதேபோல், அதிக அளவு இறுக்கமான ஜீன்ஸ் பேன்ட் அணிவதால், ஆண்களுக்கும் கேன்சர் நோய் வர வாய்ப்பு உள்ளதாம். அதாவது, சில மணி நேரங்களுக்கு இறுக்கமான ஆடை அணிந்தால், அது நமது உடலை காயப்படுத்தும். அந்த இடத்தில், ஆக்ஸிஜன் ஓட்டம் தடைப்பட்டு, பிரச்சனை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

ஆராய்ச்சியின்படி, ஜீன்ஸ் அணிவது, வயிற்றுக்கு கீழ் பகுதியில், வெப்பத்தை அதிகரிக்கும். இதனால், விந்தனுக்களின் எண்ணிக்கை குறைந்து, விறைப்பை புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. ஆனால், இந்த ஆராய்ச்சியின் உறுதியான முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இப்போது நமக்கு எழும் கேள்வி என்னவென்றால், எவ்வளவு இறுக்கமாக ஆடை அணிந்தால், அது அதிகப்படியான இறுக்கம் என்று கணக்கிடப்படுகிறது.

As per DNA’s articles

More in இந்தியா

To Top