Connect with us

அரையாண்டு விடுமுறை எப்போது? – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகம்

அரையாண்டு விடுமுறை எப்போது? – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு டிசம்பர் 11 ஆம் தேதி முதல் டிசம்பர் 21ஆம் தேதி வரையும், 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு டிசம்பர் 7ஆம் தேதி முதல் டிசம்பர் 22 ஆம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரையாண்டு விடுமுறை குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது, டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை முடிந்து ஜனவரி 2ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

More in தமிழகம்

To Top