Connect with us

Raj News Tamil

முதன்முறையாக விஜயுடன் இணையும் கிளாசிக் இயக்குநர்?

சினிமா

முதன்முறையாக விஜயுடன் இணையும் கிளாசிக் இயக்குநர்?

நடிகர் விஜய் தற்போது தளபதி 68 படத்தின் ஷீட்டிங்கில் இருந்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு, யாருடன் கூட்டணி வைப்பார் என்று திரையுலகமே காத்துக் கொண்டிருக்கிறது.

இயக்குநர் அட்லி, கார்த்திக் சுப்புராஜ், தெலுங்கு இயக்குநர் ஒருவர் என்று பல்வேறு தரப்பினர், விஜயிடம் கதை சொல்லியிருந்தனர். இந்நிலையில், விஜயின் அடுத்த படம் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, இப்படத்தை சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்க உள்ளதாம். மேலும், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தான், இப்படத்தை இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கிளாசிக் இயக்குநர்களின் பட்டியலில் உள்ள இவர், விஜயை வைத்து படம் இயக்குவதை அறிந்த ரசிகர்கள், உற்சாகம் அடைந்துள்ளனர்.

More in சினிமா

To Top