Connect with us
Raj News Tamil

Raj News Tamil

விஜயா? ரஜினியா? மீண்டும் இணையத்தில் விவாதம்! ஜெயித்தது யார்?

சினிமா

விஜயா? ரஜினியா? மீண்டும் இணையத்தில் விவாதம்! ஜெயித்தது யார்?

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களாக இருப்பவர்கள் விஜயும், ரஜினியும். இவர்கள் இருவரும் தனித்தனியாக நடித்த பல்வேறு படங்கள் வசூலில், பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியிருக்கின்றன.

என்னதான், ரஜினி சீனியராக இருந்தாலும், இவர்கள் இரண்டு பேருக்கும் இடையில் தான் தற்போது போட்டி நடந்து வருகிறது. இந்நிலையில், ரஜினியின் படையப்பா படத்திற்கும், விஜயின் கில்லி படத்திற்கும் இடையே, சில கம்பேரிசன்கள் நடந்து வருகிறது.

அதாவது, இந்த இரண்டு திரைப்படத்தில் எந்த திரைப்படம் அதிகம் வசூலித்தது என்று, இரண்டு தரப்பு ரசிகர்களும், இணையத்தில் விவாதித்து வருகின்றனர். தற்போது, உண்மையாக இரண்டு படங்களின் வசூல் நிலவரங்களும் கிடைத்துள்ளது.

அதன்படி, விஜயின் கில்லி திரைப்படம் 45 கோடி ரூபாயை ஒட்டுமொத்தமாக வசூலித்தது என்றும், ரஜினியின் படையப்பா திரைப்படம் 65 கோடி ரூபாயை படையப்பா வசூலித்தது என்றும் தெரியவந்துள்ளது.

இந்த போட்டியில் ரஜினி ஜெயித்திருந்தாலும், கில்லி படத்திற்கு தற்போதும் ரசிகர்கள் மத்தியில் அதிக மவுசு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top