Connect with us

Raj News Tamil

ஒரே நாளில் 11 பேர் கொரோனாவால் பாதிப்பு – மத்திய அரசு அறிவிப்பு

இந்தியா

ஒரே நாளில் 11 பேர் கொரோனாவால் பாதிப்பு – மத்திய அரசு அறிவிப்பு

சீனாவின் வூகான் என்ற பகுதியில் உருவான கொரோனா வைரஸ், இந்தியா உட்பட உலகம் முழுவதும் பரவியது. இந்த வைரஸ் தொற்றால், பல லட்சம் மக்கள் உயிரிழந்தனர்.

உலகத்தையே புரட்டி போட்ட இந்த தொற்றால், உலக பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. தடுப்பூசிகள் மூலமும், ஊரடங்குகள் மூலமும், இந்த கொரோன வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று ஒரே நாளில், 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதன்மூலம், இந்தியாவில் கொரோனாவில் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை, 176 ஆக உயர்ந்துள்ளது.

இந்த வைரஸ் தொற்றால், இந்தியாவில் மட்டும், இதுவரை 5 லட்சத்து 33 ஆயிரத்து 295 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை, இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 4.50 கோடி பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், நோயில் இருந்து குணமானவர்களின் எண்ணிக்கை, 4 கோடியே 44 லட்சத்து 67 ஆயிரத்து 937 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை, 98.81 சதவீதம் பேர் அந்த நோய் தாக்கத்தில் இருந்து மீண்டு வந்துள்ளனர் என்றும், 1.19 சதவீதம் பேர் மட்டும் உயிரிழந்துள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதுமட்டுமின்றி, இதுவரை 220.67 கோடி அளவில், கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும், மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

More in இந்தியா

To Top