Connect with us

Raj News Tamil

குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினர் யார்? – மத்திய அரசு அறிவிப்பு!

இந்தியா

குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினர் யார்? – மத்திய அரசு அறிவிப்பு!

குடியரசு தின விழாவின் போது உலக நாடுகளை சேர்ந்த தலைவர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைப்பது வழக்கம். இந்த ஆண்டில் சிறப்பு விருந்தினராக எகிப்து நாட்டு அதிபர் அப்தெல் பதா எல் சிசி பங்கேற்றார்.


இதையடுத்து வரும் ஜனவரி 26 ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது.

இந்நிலையில், இந்தியாவின் அழைப்பை ஏற்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள ஒப்புதல் அளித்துள்ளார். இதனை பிரான்ஸ் அதிபர் மாளிகை உறுதி செய்துள்ளது.

More in இந்தியா

To Top