Connect with us
Raj News Tamil

Raj News Tamil

காஸாவில் கடந்த 24 மணி நேரத்தில் 297 பேர் உயிரிழப்பு: 550-க்கும் மேற்பட்டோர் காயம்!

உலகம்

காஸாவில் கடந்த 24 மணி நேரத்தில் 297 பேர் உயிரிழப்பு: 550-க்கும் மேற்பட்டோர் காயம்!

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 297 பேர் உயிரிழந்தனா்; 550-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனா்.

இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் அஷ்ரஃப் அல்-கத்ரா கூறுகையில்,

உலகம் முழுவதுமிருக்கும் மருத்துவக் குழுக்கள் உடனடியாக காஸா விரைந்து வந்து, அங்கு சிகிச்சைக்காகக் காத்திருப்பர்களுக்கு உதவ வேண்டும் என்றும், நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற காஸாவிலிருந்து வெளியேற தயாராக இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

காஸா பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 297 போ் உயிரிழந்தனா்; 550-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

இத்துடன், கடந்த சில வாரங்களாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 17,997-ஆக அதிகரித்துள்ளது. இது தவிர, இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 49,500-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்துள்ளனா் என்றார் அவா்.

More in உலகம்

To Top