Connect with us

Raj News Tamil

டேனியல் பாலாஜி பற்றி பலரும் அறியாத 5 உண்மைகள்!

சினிமா

டேனியல் பாலாஜி பற்றி பலரும் அறியாத 5 உண்மைகள்!

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான டேனியல் பாலாஜி, இன்று காலை மாரடைப்பு காரணமாக, காலமானார். இவரது இறப்பு செய்தி அறிந்த திரைத்துறையினரும், ரசிகர்களும், தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இவரைப் பற்றி பலரும் அறியாத, 5 தகவல்களை தற்போது காணலாம்..

1. டேனியல் பாலாஜி ஆனது எப்படி?

டேனியல் பாலாஜியின் உண்மையானா பெயர், வெறும் பாலாஜி மட்டும் தான். இவர், சித்தி சீரியலில் டேனியல் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததால் தான், இந்த பெயரை, தனது அடைமொழியாக மாற்றிக் கொண்டார். பலரும் நினைக்கும் வகையில், அவரது பெயர் டேனியல் பாலாஜி கிடையாது.

2.குடும்ப உறவுகள்:-

கன்னட சினிமாவின் அந்நாளைய சூப்பர் ஸ்டார் சிவக்குமார் நடித்த பங்கார்டா மனுஷ்யா, நியாயவே தேவரு ஆகிய படங்களை இயக்கியவர் சித்தலிங்கா. இவர், டேனியல் பாலாஜியின் நெருங்கிய உறவினர் ஆவார். இந்த சித்தலிங்கா, வேறு யாரும் அல்ல, மறைந்த நடிகர் முரளியின் தந்தை ஆவார். அதாவது, நடிகர் முரளியும், டேனியல் பாலாஜியும், நெருங்கிய உறவினர்கள் ஆவர்.

3. கமல் உடனான உறவு:-

கமலுடன் வேட்டையாடு விளையாடு என்ற படத்தில் இவர் நடித்துள்ளார் என்ற தகவல் அனைவரும் அறிந்தது தான். ஆனால், இந்த படத்திற்கு முன்பிருந்தே, இருவருக்குமான தொடர்பு இருந்துள்ளது. அதாவது, கமல் நடித்து இதுவரை வெளியாகாமல் உள்ள மருதநாயகம் படத்தில், யுனிட் ப்ரொடக்ஷன் மேனேஜராக டேனியல் பாலாஜி பணியாற்றி உள்ளார்.

4. போற்றும் திரைத்துறை பிரபலங்கள்:-

சிறப்பான நடிகராக டேனியல் பாலாஜி இருந்தாலும், அவர் இயக்குநராக வேண்டும் என்ற ஆசையில் தான், திரைத்துறையில் நுழைந்துள்ளார். தரமணி திரைத்துறை இன்ஸ்ட்யூட்டில், இயக்குநருக்கான படிப்பை முடித்துள்ளார். இதுமட்டுமின்றி, பல்வேறு நடிகர்களுக்கும், பிரபலங்களுக்கும் சிறப்பான முன்னுதாரனமாகவும் விளங்கியுள்ளார்.

அதாவது, டேனியல் பாலாஜி குறித்து, நடிகர் சுந்தீப் கிஷன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நான் உதவி இயக்குநராக இருந்தபோது, இந்த நபர் தான் என்னுடன் மிகவும் கனிவாக நடந்துக் கொண்டார். நான் நடிகராக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்பதை அறிந்தவுடன், தனக்கு தெரிந்த பல்வேறு நபர்களிடம் என்னை அனுப்பி, பல்வேறு ஆடிஷன்களில் கலந்துக் கொள்ள வைத்தார்” என்று மிகவும் உருக்கமாக பேசியுள்ளார்.

இதேபோல், இயக்குநரும், ஜெயம் ரவியின் அண்ணனுமான மோகன் ராஜா, டேனியல் பாலாஜி குறித்து பதிவிட்டுள்ளார். அதில், “நான் Film Institute-ல் சேருவதற்கு டேனியல் பாலாஜி தான் ரோல் மாடலாக இருந்தார். இவர் ஒரு நல்ல நண்பன். இவருடன் பணியாற்றும் வாய்ப்பை நான் இழந்துவிட்டேன்” என்று கூறியுள்ளார்.

5. இறந்தாலும் வாழும் டேனியல் பாலாஜி:-

என்ன தான் பல்வேறு வில்லத்தனமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், அதற்கு நேர் எதிரான உள்ளத்தை கொண்டவர் டேனியல் பாலாஜி. இவ்வாறு நல்ல உள்ளம் கொண்ட இவர், இறந்த பிறகும் வாழும் வகையில், நல்ல செயல் ஒன்றை செய்துள்ளார். அதாவது, டேனியல் பாலாஜி கண் தானம் செய்துள்ளார். மருத்துவர்களும், அவரது ஆசையை நிறைவேற்றியுள்ளனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top