நடிகர் சூர்யாவின் பிறந்த நாள் சமீபத்தில் அவரது ரசிகர்களால், கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தின்போது, கட்-அவுட் வைக்க முயன்ற ரசிகர்கள் இரண்டு பேர், மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனை அறிந்த கடும் வருத்தம் அடைந்த சூர்யா, ரசிகர்களின் குடும்பத்தினருக்கு உதவி செய்வதாக உறுதி அளித்துள்ளார்.
இதுமட்டுமின்றி, தன்னுடைய ரசிகர் மன்றத்தை கலைப்பதற்கு அவர் முடிவு செய்துள்ளதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.
ரசிகர்களின் நலனுக்காக, சூர்யா எடுத்துள்ள இந்த முடிவு பாராட்டுக்களை பெற்று வருகிறது. நடிகர் அஜித்தும், தனது ரசிகர் மன்றத்தை, சில ஆண்டுகளுக்கு முன்பு கலைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.