Connect with us

Raj News Tamil

லாட்டரியில் விழுந்த 25 கோடி ரூபாய் பரிசு.. லாட்டரி சீட்டை தொலைத்த நபர்..

உலகம்

லாட்டரியில் விழுந்த 25 கோடி ரூபாய் பரிசு.. லாட்டரி சீட்டை தொலைத்த நபர்..

அமெரிக்காவில் மாசசூசெட்ஸ் என்ற பகுதியை சேர்ந்தவர் பால் லிட்டில். மெக்கானிக்காக வேலை பார்த்து வரும் இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார்.

அந்த லாட்டரி சீட்டின் குலுக்கல் நடந்தபோது, அதில் பால் லிட்டிலுக்கு 25 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. ஆனால், அதற்குள் அவர் தனது லாட்டரி டிக்கெட்டை, மது அருந்த பாருக்கு சென்றபோது, தொலைத்துள்ளார்.

இதனால், என்ன செய்வது என்று தெரியாமல், புலம்பி வந்துள்ளார். இதற்கிடையே, பாரில் கிடந்த லாட்டரி சீட்டை கண்டெடுத்த, அந்த பாரின் காசாளர், அதிகாரிகளிடம் கொடுத்து, பரிசுத் தொகையை பெற முயற்சித்துள்ளார்.

ஆனால், சந்தேகம் அடைந்த அவர்கள், காசாளரை கைது செய்தனர். பின்னர், உண்மையான வெற்றியாளரான பால் லிட்டிலை கண்டறிந்து, பரிசுத் தொகையை ஒப்படைத்தனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in உலகம்

To Top