Connect with us

Raj News Tamil

சீட் பெல்ட் அணியாமல் வந்த சிவாங்கி…காரை நிறுத்திய கூல் சுரேஷ்..!!

சினிமா

சீட் பெல்ட் அணியாமல் வந்த சிவாங்கி…காரை நிறுத்திய கூல் சுரேஷ்..!!

நகைச்சுவை நடிகரான கூல் சுரேஷ் தற்போது சந்தானத்தின் ‘டிடி ரிட்டன்ஸ்’ படத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் வரும் ஜுலை 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

‘டிடி ரிட்டன்ஸ்’ படத்தை வித்தியாசமாக விளம்ப்பரப்படுத்தும் விதமாக சென்னை போக்குவரத்து காவல் துறையினர் உதவியுடன் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கூல் சுரேஷ் கலந்து கொண்டார்.

அப்போது அந்த சாலை வழியாக சீட் போடாமல் வந்த சிவாங்கி காரை மறித்த கூல் சுரேஷ், பிரபலங்கள் நம்மலே விதிகளை பின்பற்றாம இருந்தா, பொதுமக்கள் எப்படி பாலோ பண்ணுவாங்க. டிரிங்க் அன்ட் டிரைவ் பண்ண கூடாது என்று அட்வைஸ் வழங்கியுள்ளார். அவரும் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் சிவாங்கி. இவர் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top