Connect with us

Raj News Tamil

தலைவர் 170-ல் இணையும் தரமான நடிகர்! அதிகாரப்பூர்வமாக அறிவித்த லைக்கா!

சினிமா

தலைவர் 170-ல் இணையும் தரமான நடிகர்! அதிகாரப்பூர்வமாக அறிவித்த லைக்கா!

ஜெயிலர் வெற்றிக்கு பிறகு, நடிகர் ரஜினிகாந்தின் மார்கெட் வேற லெவலில் உயர்ந்துள்ளது. இதனால், அவரது அடுத்தடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இவ்வாறு இருக்க, தலைவர் 170 படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும், படக்குழுவினர் தரப்பில் இருந்து ஒவ்வொன்றாக வெளிவந்துக் கொண்டு இருக்கிறது.

இந்த திரைப்படத்தில், நடிகை துஷாரா விஜயன், மஞ்சு வாரியர் ஆகியோர் நடிப்பதாக, நேற்று அறிவிப்பு வெளியானது.

இதன் ஆச்சரியம் அடங்கி முடிவதற்குள், இப்படத்தில், நடிக்கும் இன்னொரு முக்கிய நடிகர் தொடர்பான அறிவிப்பையும், லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பின்படி, இந்த திரைப்படத்தில், நடிகர் ஃபகத் ஃபாசிலும் நடிக்க உள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடிகர் ஃபகத் ஃபாசில், சமீபத்தில் விக்ரம், மாமன்னன் ஆகிய படங்களில் நடித்து, தமிழ் ரசிகர்களை மிரள வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்க்கது.

More in சினிமா

To Top