Connect with us

Raj News Tamil

கன்னட நடிகர் சிவராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதி

சினிமா

கன்னட நடிகர் சிவராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதி

கன்னடத்தில் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வருபவர் சிவராஜ்குமார். தமிழில் வெளியான ஜெயிலர், கேப்டன் மில்லர் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றார்.

இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தேவனஹள்ளி அருகே படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது, அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு படப்பிடிப்பு தளத்தில் அதிக தூசி இருந்ததே அவரது திடீர் உடல்நல குறைவுக்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது சிவராஜ்குமார் நலமாக இருப்பதாகவும், நாளை காலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top