Connect with us

Raj News Tamil

700 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆண்டர்சன் உலக சாதனை!

விளையாட்டு

700 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆண்டர்சன் உலக சாதனை!

இந்தியா -இங்கிலாந்து அணிக்கு மோதும் கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டில் தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது.

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஸாக் கிராவ்லி 79 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5, ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்கள் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 477 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சுப்மன் கில் 110 ரன்களும், ரோகித் 103 ரன்களும் குவித்தனர். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக சோயப் பஷீர் 5 விக்கெட்டுகளும், ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் டாம் ஹார்ட்லி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

ஜேம்ஸ் ஆண்டர்சன் குல்தீப் யாதவ்வை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கைப்பற்றிய விக்கெட்டுகளில் எண்ணிக்கை 700 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் டெஸ்ட் வரலாற்றில் 700 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார்.

2003-ல் டெஸ்டில் அறிமுகமான ஆண்டர்சன் 187 போட்டிகளில் 700 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

உலக அளவில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்து பட்டியலில் 3-வது இடத்து முன்னேறியுள்ளார்.

அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியல்:-

  1. முரளிதரன் – 800 விக்கெட்டுகள்
  2. ஷேன் வார்னே – 708 விக்கெட்டுகள்
  3. ஜேம்ஸ் ஆண்டர்சன் – 700 விக்கெட்டுகள்
  4. அனில் கும்ப்ளே- 619 விக்கெட்டுகள்
  5. ஸ்டூவர்ட் பிராட் – 604 விக்கெட்டுகள்
Continue Reading
Advertisement
You may also like...

More in விளையாட்டு

To Top