Connect with us

Raj News Tamil

நடிகை ரோஜாவுக்கு உடல் நலக்குறைவு…மருத்துவமனையில் அனுமதி..!!

இந்தியா

நடிகை ரோஜாவுக்கு உடல் நலக்குறைவு…மருத்துவமனையில் அனுமதி..!!

ஆந்திர அமைச்சரும் நடிகையுமான ரோஜா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் நகரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் அம்மாநிலத்தின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு அமைச்சராகவும் இருப்பவர் ரோஜா.

தெலுங்கு படங்களின் மூலம் சினிமா உலகில் அறிமுகமான நடிகை ரோஜா, தமிழில் வெளியான செம்பருத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

நடிகை ரோஜா 1999ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்ட சபை தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்ட நடிகை ரோஜா வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார்.

இந்நிலையில் நடிகை ரோஜா திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கால் வலி மற்றும் கால் வீக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top