Connect with us

Raj News Tamil

அட்லீ – அல்லு அர்ஜுன் உடன் இணையும் இசையமைப்பாளர் யார்..?

சினிமா

அட்லீ – அல்லு அர்ஜுன் உடன் இணையும் இசையமைப்பாளர் யார்..?

ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. தெறி, மெர்சல், பிகில் ஆகிய 3 ப்ளாக் பஸ்டர் படங்களை கொடுத்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமடைந்தார். ஷாருக்கானை வைத்து இவர் இயக்கிய ஜவான் திரைப்படமும் 1000 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்தது.

தமிழ், ஹிந்திக்கு பிறகு தெலுங்கு பக்கம் தன்னுடைய பார்வையை திருப்பி இருக்கும் அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இந்த படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்க போவதாக கூறப்படுகிறது. இவரது இசையில் வெளியான ஜவான் திரைப்படத்தின் சல்லேக்கா பாடல் இன்றளவும் இந்திய அளவில் ட்ரெண்டிங் உள்ளது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top