Connect with us

Raj News Tamil

விடுதி குளியலறையில் கேமரா! – வச்சவனை வெளுத்து வாங்கிய மாணவிகள்!

இந்தியா

விடுதி குளியலறையில் கேமரா! – வச்சவனை வெளுத்து வாங்கிய மாணவிகள்!

கர்நாடகா மாநிலம், கலபுரகி ஜேவர்கி நகரில் சிறுபான்மையினர் மாணவிகள் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இதில் தங்கியுள்ள ஒரு மாணவியை சந்திப்பதற்காக, மாணவியின் நண்பரான சலீம் என்பவர் அடிக்கடி விடுதிக்கு வருவார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், குளியல் அறைக்கு சென்ற மாணவி ஒருவர் அங்கு ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து, மாணவிகள் அனைவரும் சலீமை சுற்றி வளைத்து அவரை சரமாரியாக தாக்கினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், குளியலறையில் இருந்த ரகசிய கேமராவை கைப்பற்றியதோடு சலீமையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவிகள் தங்கும் விடுதியின் குளியலறையில் கேமரா இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More in இந்தியா

To Top