Connect with us

Raj News Tamil

தடுப்பூசி சான்றிதழில் மோடி புகைப்படம் நீக்கம்! பரவிய தகவல்! உண்மை காரணம் இதுதானா?

இந்தியா

தடுப்பூசி சான்றிதழில் மோடி புகைப்படம் நீக்கம்! பரவிய தகவல்! உண்மை காரணம் இதுதானா?

அஸ்ட்ராஜெனேக்கா என்ற நிறுவனம், SII என்ற இந்திய நிறுவனத்துடன் இணைந்து, கோவிஷீல்டு என்ற கொரோனா தடுப்பூசியை தயாரித்திருந்தது. ஆனால், இந்த தடுப்பூசியை பயன்படுத்தியவர்களுக்கு, ரத்தம் உறைதல் உள்ளிட்ட சில பக்க விளைவுகள் அரிதாக ஏற்படலாம் என்று, அஸ்ட்ராஜெனேக்கா நிறுவனம், நீதிமன்றத்தில் கூறியிருந்தது.

இந்த தகவல், இந்தியாவில் பரவி, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன. இதற்கிடையே, இந்தியாவில் வழங்கப்படும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில், சில மாற்றங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மேற்கொண்டிருந்தது.

அதாவது, அந்த சான்றிதழில் இடம்பெற்றிருந்த பிரதமர் மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டிருந்தது. பக்க விளைவுகள் ஏற்படும் என்ற செய்தி வைரலான பிறகே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக, சிலர் விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து, மத்திய சுகாதாத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. அதாவது, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தான், பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டிருப்பதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடியின் புகைப்படம் நீக்கப்படுவது என்பது, இது முதல் முறை அல்ல.

இதற்கு முன்னர், 2022-ஆம் ஆண்டில், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மனிப்பூர் மற்றும் கோவாவில் ஆகிய 5 மாநிலங்களில், சட்டமன்ற தேர்தல் நடைபெற்றபோது, தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து, பிரதமர் மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டிருந்தது.

More in இந்தியா

To Top