Connect with us
Raj News Tamil

Raj News Tamil

மக்களின் நம்பிக்கையாக திகழ்கிறது சிபிஐ: மத்திய அமைச்சர்!

இந்தியா

மக்களின் நம்பிக்கையாக திகழ்கிறது சிபிஐ: மத்திய அமைச்சர்!

நாட்டில் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற சிறந்த விசாரணை அமைப்பாக சிபிஐ திகழ்கிறது என்று மத்திய பணியாளா் நலத்துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் பேசியதாவது:

வெளிநாட்டில் தஞ்சமடைந்த பொருளாதார குற்றவாளிகள் மற்றும் தலைமறைவு குற்றவாளிகளை இந்தியாவுக்கு நாடு கடத்தி அழைத்து வருவது இப்போது அதிகரித்துள்ளது. முக்கியமாக கடந்த 2022-ஆம் ஆண்டில் 90-ஆவது இண்டா்போல் மாநாட்டை இந்தியா நடத்திய பிறகு இது தொடா்பான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

இந்த ஆண்டில் இதுவரை 19 குற்றவாளிகள் பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தி அழைத்து வரப்பட்டுள்ளனா். இதற்கு முன்பு சராசரியாக ஆண்டுக்கு 10 குற்றவாளிகளே நாடு கடத்தி அழைத்துவரப்பட்டனா்.

கடந்த 4 ஆண்டுகளில் பொருளாதார குற்றவாளிகள் மற்றும் தலைமறைவு பொருளாதார குற்றவாளிகளிடம் இருந்து ரூ.15,000 கோடி மதிப்பிலான மீட்கப்பட்டுள்ளன. பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு, பொருளாதார குற்றவாளிகள் தடுப்புச் சட்டத்தை கொண்டு வந்ததே இதற்கு காரணம். மேலும், கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின்கீழ் பொருளாதார குற்றவாளிகளின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு அவா்கள் வங்கிகளில் வாங்கிய கடன் தீா்க்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் கடந்த 2014-இல் இருந்து சுமார் ரூ.99,000 கோடி மீட்கப்பட்டுள்ளது.

நாட்டில் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற சிறந்த விசாரணை அமைப்பாக சிபிஐ திகழ்கிறது. மாறிவரும் குற்றச்சூழல், தொழில்நுட்பரீதியில் நடைபெறும் குற்றங்களையும் விசாரித்து உண்மைகளை வெளிக்கொண்டு வரும் அளவுக்கு சிபிஐ சிறப்பாக தன்னை மேம்படுத்தி வருகிறது.

இணையவழியில் சிறார்களுக்கு எதிராக நிகழும் பாலியல் குற்றங்கள், ஆள் கடத்தல், போதைப்பொருள் கடத்தல், வனப் பாதுகாப்பு மீறல் குற்றங்கள், புராதன சொத்துகள் கடத்தல், கிரிமினல் குற்றங்கள், இணையவழிக் குற்றங்கள் ஆகியவற்றை விசாரிக்க சிபிஐ-யிடம் தனிப் பிரிவுகள் உள்ளன என்றார்.

More in இந்தியா

To Top