Connect with us

Raj News Tamil

காசாவில் போர் நிறுத்தம்; ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றம்: இந்தியா புறக்கணிப்பு!

உலகம்

காசாவில் போர் நிறுத்தம்; ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றம்: இந்தியா புறக்கணிப்பு!

இஸ்ரேல் – ஹமாஸ் போர் 20 நாட்களைக் கடந்துவிட்ட நிலையில் அங்கு மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போர் நிறுத்தத்தைக் கொண்டுவரக் கோரி ஜோர்டான் அரசு ஐ.நா. பொதுச் சபையில் வரைவுத் தீர்மானம் கொண்டுவந்தது. தீர்மானத்துக்கு ரஷ்யா, பாகிஸ்தான், மாலத்தீவு, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா உள்பட 40 நாடுகள் உத்தரவாதம் அளித்திருந்தன. ‘பொதுமக்களை பாதுகாத்தல் மற்றும் சட்ட, மனித உரிமை கடமைகளை கடைப்பிடித்தல்’ எனத் தீர்மானத்துக்கு தலைப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. உடன் ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, ஜப்பான், உக்ரைன், பிரிட்டன் உள்ளிட்ட 45 நாடுகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன.

ஒட்டுமொத்தமாக 120 நாடுகள் ஆதரவும், 14 நாடுகள் எதிர்ப்பும் தெரிவித்தன. அமெரிக்கா எதிர்த்து வாக்களித்ததோடு தீர்மானத்தில் ஓரிடத்தில் கூட ஹமாஸ் அமைப்பினரை ஊடுருவல்காரர்கள் என்று சுட்டிக்காட்டாததை வன்மையாகக் கண்டித்தது.

More in உலகம்

To Top