Connect with us

Raj News Tamil

மத்திய அரசு: மாநிலங்களின் உரிமைகளை பறித்து கூட்டாட்சி முறையை அழிக்க முயல்கிறது- கேரள முதல்வர்!

இந்தியா

மத்திய அரசு: மாநிலங்களின் உரிமைகளை பறித்து கூட்டாட்சி முறையை அழிக்க முயல்கிறது- கேரள முதல்வர்!

மாநிலங்களின் உரிமைகளை பறித்து கூட்டாட்சி முறையை அழிக்க மத்திய அரசு முயல்கிறது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நேற்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி ராஜா மற்றும் இண்டியா கூட்டணியின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்தப் போராட்டத்தை தொடங்கி வைத்து பினராயி விஜயன் பேசியதாவது: நாங்கள் வடக்கு–தெற்கு பிரிவை ஏற்படுத்துவதாக கூறுவதுஅடிப்படை ஆதாரமற்றது. மாநிலங்களின் உரிமைகளை பறித்து கூட்டாட்சி முறையை அழிக்க மத்திய அரசு தான் முயல்கிறது. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களை மத்திய அரசு பாரபட்சமாக நடத்துகிறது.

நிதிப் பகிர்வில் நியாயமற்று செயல்படுகிறது. மாநிலங்களின் நிதி ஆதாரங்களை மத்திய அரசு எடுத்துக்கொள்வதால் இந்தியாவின் கூட்டாட்சிக் கட்டமைப்பு பாதிக்கப்படுகிறது. மாநிலங்களைப் பாதிக்கும் பிரச்சினைகளில், மாநிலங்களின் கருத்தைக் கேட்காமல், அவர்களின் ஒப்புதலைப் பெறாமல், பன்னாட்டு ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன.

இவை அனைத்தும் மாநிலங்களின் உரிமைகள் எப்படி நசுக்கப்படுகின்றன என்பதற்கும், இந்தியா எவ்வாறு ஜனநாயகமற்ற நாடாக மாறுகிறது என்பதற்கும் உதாரணம். இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.

More in இந்தியா

To Top