Connect with us
Raj News Tamil

Raj News Tamil

ஜெயலலிதாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!

தமிழகம்

ஜெயலலிதாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!

இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழக வேந்தராக முதல்வரே செயல்படுவார் என 2013 ஜெயலலிதா அறிவித்தார். இதற்காக அவரை மனதார பாராட்டலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.

தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது

இந்தியாவிலேயே இசைக்காக உருவாக்கப்பட்ட ஒரே பல்கலைக்கழகம் என்ற பெருமை இந்த பல்கலைக்கழகத்துக்குத்தான் உண்டு. முழுக்க முழுக்க மாநில அரசு நிதியுதவியில் செயல்படும் பல்கலைக்கழகம் இது. அதைவிட சிறப்பு என்னவென்றால், இந்த பல்கலைக்கழகத்துக்குத்தான், மாநிலத்தை ஆளும் முதல்வரே வேந்தராக இருக்கும் உரிமை உள்ளது. நான் அரசியல் எல்லாம் பேசவில்லை. எதார்த்தத்தைப் பேசுகிறேன்.

இப்படி முதல்வர்களே வேந்தர்களாக இருந்தால்தான், பல்கலைக்கழகங்கள் சிறப்பாக வளர முடியும், வளரும். மற்றவர்கள் கையில் இருந்தால், அதன் நோக்கமே சிதைந்துப் போய்விடும் என்று நினைத்துதான், 2013-ம் ஆண்டே, இந்த பல்கலைக்கழகத்தோட வேந்தர், முதல்வர்தான் என்று அன்று ஆட்சியில் இருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். இதற்காக அவரை மனதார பாராட்டலாம். நானும் மனமுவந்து பாராட்டுகிறேன் என்றார்.

More in தமிழகம்

To Top