Connect with us

Raj News Tamil

அயலான் படத்தை ரிலீஸ் செய்ய நீதிமன்றம் தடை…அதிர்ச்சியில் SK ரசிகர்கள்

சினிமா

அயலான் படத்தை ரிலீஸ் செய்ய நீதிமன்றம் தடை…அதிர்ச்சியில் SK ரசிகர்கள்

இயக்குனர் ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ள திரைப்படம் அயலான். இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் படத்தை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் படத்தை முதலில் 24 AM நிறுவனம் தயாரித்து வந்தது. ஆனால், படத்தின் பட்ஜெட்டில் ஏற்பட்ட சில பிரச்சனை காரணமாக 24 AM நிறுவனம் படத்திலிருந்து விலகியது. இதையடுத்து KJR நிறுவனம் இந்த படத்தின் தயாரிப்பு உரிமைகளை வாங்கி, அதன்பிறகு படத்தை தயாரித்தது.

அயலான் படத்தை தயாரிக்க 24 AM நிறுவனம் TSR நிறுவனத்திடம் 10 கோடி ரூபாய் கடனாக பெற்று இருந்தது. தயாரிப்பு கைமாறிய பிறகு KJR ஸ்டுடியோஸ் இந்த கடனை அடைக்க வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் 10 கோடி ரூபாய் கடனில், 3 கோடி ரூபாய் மட்டுமே திருப்பி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் TSR ஃபிலிம்ஸ் நிறுவனம் மீதமுள்ள தொகையை கொடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அயலான் படத்தை நான்கு வாரங்களுக்கு வெளியிட தடை விதித்துள்ளது. மேலும் KJR நிறுவனத்தின் தயாரிப்பில் இன்று வெளியாகவிருந்து ஆலம்பனா திரைப்படத்தின் ரிலீஸையும் தடை செய்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

More in சினிமா

To Top