Connect with us

Raj News Tamil

புதிய வகை கோவிட் வைரஸ் கண்டுபிடிப்பு!!!

ஆரோக்கியம்

புதிய வகை கோவிட் வைரஸ் கண்டுபிடிப்பு!!!

இந்தோனேஷியாவில் தற்போது வரை கண்டுபிடித்துள்ள கோவிட் வைரஸ்சை விட இது முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்தோனேஷிய தலைநகர் ஜகர்த்தாவில் நோயாளி ஒருவரிடமிருந்து எடுக்கப்பட்டுள்ள மாதிரிகள் அதிர்ச்சியூட்டும் தகவல்களை அளித்துள்ளது.அதாவது அந்த நோயாளியிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்த பொது, அந்த வைரஸானது சுமார் 113 தனிப்பட்ட மாற்றங்களை கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

அதில் 37 மாறுதல்கள், மனிதனின் உடலில் உள்ள செல்களின் புரதச்சத்தை அழிக்கக் கூடியவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நம்மை அச்சுறுத்திய omicron வகை கொரோனா வைரஸ்ஸை இதனுடன் ஒப்பிடும்போது வெறும் 50 தனிப்பட்ட மாற்றங்களை மட்டுமே கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

எய்ட்ஸ் அல்லது புற்றுநோய் போன்ற நோய்கள் பாதித்தோர் எளிதில் இந்த வைரஸால் பாதிக்கப்படுவர் என்றும் இதனால் அவர்களால் நோயை எதிர்த்து போராடுவது கடினம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த புதிய வகை வைரஸ் தொடர்ந்து மாற்றமடைந்துவருவதால் கடுமையான தொற்றுநோய்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. வார்விக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் லாரன்ஸ் யங் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார், அதில் புதிய வகை வைரஸ் தொடர்ந்து மாற்றமடைந்துவருவதால் நோய் பாதித்தோருக்கு பல தொற்று நோய்களை ஏற்படுத்தும் ஆபத்து இருப்பதாக கூறினார்.
மேலும் இதுபோன்ற மாறுபாடுகளை கண்டறிய வேண்டுமானால் மரபணுக்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றும் கூறினார்.

Continue Reading
Advertisement

More in ஆரோக்கியம்

To Top