Connect with us

Raj News Tamil

‘கோவை ரைசிங்’ என்ற தலைப்பில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட திமுக

தேர்தல் 2024

‘கோவை ரைசிங்’ என்ற தலைப்பில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட திமுக

திமுக சார்பில் கோவை தொகுதிக்கான தேர்தல் அறிக்கை கோவை ரைசிங்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை கோவை தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெளியிட்டார்.

தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

கோவையில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் நீர் மாசு கட்டுப்படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், ஏரிகளில் கழிவு நீர் கலப்பதும் தடுக்கப்படும்.

கோவை மாவட்டத்தில் பன்னோக்கு சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டப்படும்

கோவை மெட்ரோ ரயில் திட்டம் விரைந்து மேற்கொள்ளப்படும். முதல் கட்ட பணிகள் உரிய கால நேரத்திற்குள் தொடங்கி முடிவடையும். சிறுவாணி, பில்லூர் ஆறுகள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.

விசைத்தறி வளர்ச்சி கவுன்சில் உருவாக்கப்பட்டு மின்சார செலவு உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளும் கவனித்துத் தீர்க்கப்படும்.

பம்புசெட் மற்றும் உதிரிபாகத் தொழில்களில் உள்ள ஜிஎஸ்டி பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.

கோழிப் பண்ணை விவசாயிகளின் தீவனம், மின்சாரம் மற்றும் இதர பிரச்சினைகள் குறிப்பிட்ட கால வரையறைக்குள் தீர்க்கப்படும் என அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தேர்தல் 2024

To Top