Connect with us

Raj News Tamil

4-வது சுற்றில் முன்னிலையில் யார்? வெற்றி முகம் யாருக்கு?

தமிழகம்

4-வது சுற்றில் முன்னிலையில் யார்? வெற்றி முகம் யாருக்கு?

ஈரோடு கிழக்கு தொகுதி யாருக்கு என்ற கேள்விக்கான பதில் தான், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் எதிர்பார்த்து கிடக்கின்றனர். அதற்கான பதில், ஒவ்வொரு சுற்றின் முடிவில், கொஞ்சம் கொஞ்சமாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

முதல் இரண்டு சுற்றுகள் முடிவில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 17,417 வாக்குகளும், கே.எஸ்.தென்னரசு 5,598 வாக்குகளும், மேனகா 1,479 வாக்குகளும், ஆனந்த் 206 வாக்குகளும் பெற்றனர். தற்போது, 4-வது சுற்றுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

இதுவரை, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 31,891 வாக்குகளையும், கே.எஸ்.தென்னரசு 10,616 வாக்குகளையும், மேனகா 2,032 வாக்குகளும், ஆனந்த் 291 வாக்குகளும் பெற்றனர். இதில், அதிமுக வேட்பாளரை விட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சுமார் 21,275 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார் என்பது கூடுதல் தகவல்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top