Connect with us

Raj News Tamil

வாரத்தில் 3 நாட்கள் கோழிக்கறி…புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு இத்தனை வசதிகளா..!!

தமிழகம்

வாரத்தில் 3 நாட்கள் கோழிக்கறி…புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு இத்தனை வசதிகளா..!!

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

அவரது உடல்நிலை சீரடையாததால் சிறை மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டு உள்ளார். செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் மருத்துவ அடிப்படையில் பழங்கள் சாப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியை முதல் வகுப்பு சிறையில் வைக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், கட்டில், தலையணை, மின்விசிறி, மேசை, நாற்காலி, புத்தகங்கள், தனி கழிவறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கிடைக்கப்பெற உள்ளன.

வாரத்தில் 3 நாட்கள் கோழிக்கறி வழங்கப்படும். சிறையில் கைதிகள் அணியும் சீருடைக்கு பதிலாக சாதாரண உடைகளை அணிந்து கொள்ளலாம். தங்கும் அறையின் அளவு சற்று பெரிதாக இருக்கும்.

மின்விசிறி, கட்டில், மெத்தை, நாற்காலி மேஜை, கொசுவலை, நாளிதழ்கள், தொலைக்காட்சி போன்ற வசதிகள் இடம்பெறும். சிறை கண்காணிப்பாளர் அனுமதியளித்தால் சிறையில் இருக்கும் பாத்திரங்களுக்கு பதிலாக வெளியே இருந்து ஹாட்பாக்ஸ், தட்டு பயன்படுத்தலாம்.

சிறையில் வளாகத்தில் நடத்தப்படும் உணவகத்தில் ரூ.1,000 மதிப்பிலான பொருட்கள் வாங்கிக் கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனகளை மேற்கொள்ள பிரத்யேக மருத்துவ பணியாளர்கள் இருப்பார்கள்.

More in தமிழகம்

To Top