Connect with us

Raj News Tamil

கமலின் ‘தக் லைப்’ படத்தை விட்டு வெளியேறும் பிரபல நடிகர்?

சினிமா

கமலின் ‘தக் லைப்’ படத்தை விட்டு வெளியேறும் பிரபல நடிகர்?

மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் தனது 234வது படமாக ‘தக் லைப்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இப்படத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா, கவுதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஜஸ்வர்யா லஷ்மி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தற்காலிகமாக இதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கால்ஷீட் பிரச்னையால் ஏற்கனவே இந்த படத்திலிருந்து துல்கர் சல்மான் வெளியேறினார். அவரைப்போலவே இப்போது ஜெயம் ரவியும் கால்ஷீட் பிரச்னையால் இந்த படத்தை விட்டு தற்போது வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது குறித்து எந்த வித உறுதியான தகவல் வெளியிடவில்லை.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top