Connect with us

Raj News Tamil

டெல்லியில் தடையை மீறி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்….மீண்டும் மோசமடைந்த காற்றின் தரம்

தமிழகம்

டெல்லியில் தடையை மீறி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்….மீண்டும் மோசமடைந்த காற்றின் தரம்

டெல்லியில் தடையை மீறி பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் இன்று காலை மீண்டும் சில பகுதிகளில் அடர்த்தியான புகை மூட்டத்துடன் காற்றின் தரம் மோசமான அளவில் பதிவாகியது.

காற்றின் தரம், வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு (SAFAR) தரவுகளின்படி இன்று காலை 6 மணி அளவில் காற்றின் தரக்குறியீடு 286 என்ற நிலையில் பதிவாகியது. இதற்கிடையில்,தீபாவளியையொட்டி தடையை மீறி டெல்லி மற்றும் என் சி ஆர் பகுதியில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

ஆய்வு மையத்தின் தகவலின்படி,டெல்லி பல்கலைக்கழகம் பகுதியில் காற்றின் தரக்குறியீடு 313 ஆகவும் , ஐஐடி டெல்லி பகுதியில் காற்றின் தரக்குறியீடு 317 ஆகவும் மற்றும் விமான நிலையம் போன்ற பகுதிகளில் காற்றின் தரக்குறியீடு 308 உடன் ‘மிகவும் மோசமான’ நிலை என பதிவாகின.

இதைத்தவிர நொய்டா, குருகிராம், லோதி சாலை, பூசா உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் தரக்குறியீடு 250க்கும் அதிகமாக பதிவாகின.

More in தமிழகம்

To Top