Connect with us

Raj News Tamil

குட் நைட் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்!

சினிமா

குட் நைட் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்!

காதலும் கடந்து போகும், விக்ரம் வேதா, காலா உள்ளிட்ட பல்வேறு படங்களில், குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் மணிகண்டன். நடிகராக மட்டுமின்றி, திரைக்கதை அமைப்பாளராகவும் சில படங்களில் பணியாற்றியுள்ளார்.

சமீபத்தில் இவர் குட் நைட் என்ற படத்தில், ஹீரோவாக அறிமுகமாகியிருந்தார். ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், வசூலிலும் நல்ல லாபத்தை பார்த்தது.

இப்படத்தை திரையரங்குகளில் பார்க்க தவறிய ரசிகர்கள், ஓடிடியில் வெளியான பிறகாவது, பார்க்கலாம் என்று காத்திருந்தனர். ஆனால், படம் வெளியாகி, ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும், எந்தவொரு ஓடிடியிலும், வெளியாகாமல் இருந்தது.

ரசிகர்களின் நீண்ட நாள் ஏக்கத்திற்கு பிறகு, தற்போது இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வரும் 3-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top