Connect with us

Raj News Tamil

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெரும் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர்…!

உலகம்

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெரும் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர்…!

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் (வயது 37). இதுவரை இவர் கலந்துகொண்ட 161 ஒருநாள் போட்டிகளில் 6,932 ரன்களும், 111 டெஸ்ட் போட்டிகளில் 8,695 ரன்களும் எடுத்துள்ளார். மேலும், 99 டி20 போட்டிகளில் 2,894 ரன்கள் அடித்துள்ளார்.

தற்போது, ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் தொடரில் டேவிட் வார்னர் இடம்பெற்றுள்ளார். இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் வரும் 3ம் தேதி சிட்னி மைதானத்தில் தொடங்க உள்ளது. இதன்பின்னர், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக டேவிட் வார்னர் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வுபெறுவதாக டேவிட் வார்னர் அறிவித்துள்ளார்.

இதனிடையே 2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு அழைப்பு விடுத்தால் விளையாட தயார் எனவும், ஆஸ்திரேலியா அணிக்காக டி20 கிரிக்கெட்டி போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

More in உலகம்

To Top