Connect with us

Raj News Tamil

ஹரியானாவில் பாஜக அரசுக்கு சிக்கல்…ஆதரவை வாபஸ் பெற்ற எம்எல்ஏக்கள்..!!

அரசியல்

ஹரியானாவில் பாஜக அரசுக்கு சிக்கல்…ஆதரவை வாபஸ் பெற்ற எம்எல்ஏக்கள்..!!

ஹரியானா மாநிலத்தில் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபரில் சட்டசபை தேர்தலில் மொத்தம் 90 தொகுதிகளில் பாஜக 40 இடங்களை கைப்பற்றியது. ஆட்சி அமைக்க 46 இடங்கள் தேவை என்பதால், 10 எம்எல்ஏக்களைக் கொண்ட ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணியை உருவாக்கி பாஜக ஹரியானாவில் ஆட்சி அமைத்தது.

இதில் பாஜகவின் மனோகர் லால் கட்டார் முதல்வராக பதவியேற்றார். இவர் கடந்த மார்ச் மாதம் மனோகர் லால் கட்டார் தனது பதவியை ராஜினாமா செய்தையடுத்து ஹரியானா மாநில பா.ஜ., தலைவர் நயாப் சிங் சைனி முதல்வராக பதவியேற்றார்.

இந்நிலையில் 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் பா.ஜ.,வுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்று காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வரும் அக்டோபரில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ள நிலையில் 3 சுயேச்சைகள் ஆதரவை வாபஸ் பெற்றதால் மாநில அரசு முன்கூட்டியே கவிழ வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in அரசியல்

To Top