Connect with us

Raj News Tamil

துபாயில் ரூ. 500 கோடி பதுக்கல்.. ஆர்கே சுரேஷுக்கு மீண்டும் சம்மன்!

தமிழகம்

துபாயில் ரூ. 500 கோடி பதுக்கல்.. ஆர்கே சுரேஷுக்கு மீண்டும் சம்மன்!

சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவம், தங்களிடம் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி வழங்குவதாக கூறி சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரிடம் 2438 கோடி ரூபாய் மோசடி செய்தது. இதுதொடர்பாக இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனனர்,

இந்த மோசடியில் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் தமிழக பாஜக ஓபிசி பிரிவு துணைத் தலைவரான ஆர்.கே.சுரேஷுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆர்கே சுரேஷுக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் விசாரணைக்கு ஆஜராகாமல் சுமார் 10 மாதங்களாக துபாயில் தலைமறைவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் ஆருத்ரா கோல்டு நிறுவனம் துபாயில் 500 கோடி பதுக்கி வைத்திருப்பதை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து ஆர்கே சுரேஷ் விசாரணைக்கு ஆஜராக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர்.

துபாய் நாட்டில் பதுங்கி இருக்கும் ஆருத்ரா நிறுவன இயக்குநர்களையும் இண்டர்போல் போலீஸார் உதவியுடன் பிடிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

More in தமிழகம்

To Top