Connect with us

Raj News Tamil

இறுதி போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா!

விளையாட்டு

இறுதி போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா!

கொல்கத்தாவில் நடைபெற்ற 2-வது அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-ஆவது அணியாக இறுதி போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா அணி.

இத்துடன் ஆஸ்திரேலியா, உலகக் கோப்பை போட்டியில் 8வது முறையாக இறுதி ஆட்டத்துக்கு நுழைத்துள்ளது. மறுபுறம், உலகக் கோப்பை போட்டி வரலாற்றில் நாக்அவுட் சுற்றுடன் வெளியேறும் தென்னாப்பிரிக்காவின் சோகம், இந்த முறை நீடித்துள்ளது.

ஏற்கெனவே இந்திய அணி முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில், வரும் 19-ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

More in விளையாட்டு

To Top